தென்கிழக்காசியாவிலேயே ஒரே நாளில் 556,000 பேருக்கு மேல் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்தது மலேசியா

கோலாலம்பூர், ஜூலை 30:

கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் மலேசியா தனது வேகத்தை தக்க வைத்துள்ளது. வியாழக்கிழமை (ஜூலை 29) 556,404 தடுப்பூசி மருந்துகளை செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளது.

சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஆதம் பாபா வெள்ளிக்கிழமை (ஜூலை 30) தனது டுவிட்டர் தளத்தில் 343,530 பேர் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றனர், 212,874 பேர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்றனர் என்று ஒரு டுவீட்டின் மூலம் தெரிவித்தார்.

இதுவரை மொத்தம் 19,502,452 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன, மொத்த மலேசியாவில் வயது வந்தோர் தொகையில் சுமார் 56.3% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் வயது வந்தோரில் 27% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

இதில், லாபுவான் அதிகபட்சமான தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலமாக இருக்கின்றது. வயது வந்தோர் தொகையில் 90.8% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்றிருக்கிறார்கள். அதே சமயம் சபா மாநிலத்தில் வயதுடைய மக்கள் தொகையில் 27.9% மட்டுமே குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றிருக்கின்றனர். மலேசியாவில் குறந்த தடுப்பூசி பெற்றுக்கொண்ட மாநிலமாக சபாவே உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here