குரங்குக்கு கோவிட் -19 தொற்றா? மறுத்தது கிளந்தான் சுகாதாரத் துறை

கோத்தா பாரு: குவா மூசாங்கில் ஒரு குரங்குக்கு கோவிட் -19 தொற்று இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு கிளந்தான் மாநில சுகாதாரத் துறை (JKNK) மறுப்பு தெரிவித்துள்ளது.

JKNK இயக்குநர் டாக்டர் ஜைனி ஹுசேன் இது பற்றி கூறியபோது, தமது சுகாதார துறையை சேர்ந்த யாரும் விலங்குகளுக்கு கோவிட் -19 ஸ்கிரீனிங் சோதனைகளை நடத்தவில்லை என்று கூறினார்.

“இது நியாயமற்றது, நாங்கள் குரங்குகளுக்கு ஸ்மியர் சோதனைகள் (smear test) செய்வதில்லை” என்று நேற்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.

கோவிட் -19 தொற்றுக்குள்ளானவர்களுக்கு சுகாதாரத்துறையால் அடையாளப்படுத்தப்படும் இளஞ்சிவப்பு வளையல் அணிந்த இரு குரங்கின் படம் கொண்ட முகநூலில் பதிவினை குறித்து கருத்து கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here