புதுடெல்லி : மலேசியாவுக்கான புதிய இந்திய தூதராக B. நாகபூஷண ரெட்டியை இந்தியா நியமித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஆகஸ்டு 10) இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அவர் விரைவில் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் அனைத்துலக ஒத்துழைப்புக்கான இணைச் செயலாளராக ரெட்டி பணியாற்றி வருகிறார்.
1993 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாக பதவி வகித்த இவர், ஜூலை 2016 முதல் டிசம்பர் 2018 வரை நைஜீரியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக இருந்தார்.
அதற்கு முன்னர் அவர் ஜெனீவாவில் இந்தியாவின் நிரந்தர பணியில் துணை பிரதிநிதியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதம் மலேசியாவிற்கான இந்தியத் தூதராக பணியாற்றிய மிருதுல் குமாருக்கு பதிலாக ரெட்டி நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
– பெர்னாமா