தோக் மாட்: அரசியலமைப்பில் பேச்சுக்கு இடமில்லை- உடனடியாக பதவி விலகுமாறு முஹிடினுக்கு வலியுறுத்தல்

சிரம்பான்: நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை தெளிவாக இழந்ததால் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று டத்தோஸ்ரீ முகமட் ஹசான் கூறினார். அம்னோ துணைத் தலைவரான முகமட் ஹசான் கூறுகையில்  அவ்வாறு செய்யத் தவறினால் அரசாங்க முடிவுகளினால் குறிப்பிடத்தக்க சட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறினார்.

முஹிடின் பதவி விலகாவிட்டால், நிர்வாகத்தால் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவின் சட்டபூர்வத்தன்மை மற்றும் அரசியலமைப்புக்கு எதிர்காலத்தில் சவால் விடுக்கப்படலாம் என்று ரந்தாவ் சட்டமன்ற உறுப்பினரான முகமட் கூறினார்.

பிரதமர் அலுவலகத்தின் ஒருமைப்பாட்டைக் காப்பதற்குப் பதிலாக அரசியல் சாசனத்தை பிரதமர் அரசியலுக்காக அதனை பயன்படுத்துகிறார். பெரும்பான்மையினரின் ஆதரவை இழந்தபின் அவர் தனது சட்டபூர்வமான தன்மையை தெளிவாக இழந்துவிட்டார்.அவர் உடனடியாக பதவி விலகவில்லை என்றால், இது அரசாங்கத்தை கடினமான நிலைக்கு தள்ளும். இது பல சட்ட மோதல்கள் மற்றும் நிதி இழப்பு அபாயத்தை ஏற்படுத்தும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 14) ஒரு அறிக்கையில் கூறினார்.

மாமன்னரை  சிக்கலில் மாட்டி விடுவதற்கு  பதிலாக அவரது அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற உதவுவதற்கும் அவர்கள் கடமைப்பட்டவர்கள் என்று முகமது கூறினார்.  அரசியலமைப்பு பேச்சுவார்த்தைக்குட்பட்டது அல்ல என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார். அரசியலமைப்பால் வழங்கப்பட்ட வரம்புகள் மற்றும் ஆணைகளுக்குள் ஒரு பிரதமருக்கு தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதை விட முக்கியமானது எதுவுமில்லை.

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 13), முஹிடின் ஒரு சிறப்பு உரையில், தற்போதைய அரசியல் நிச்சயமற்ற நிலைகளைத் தொடர்ந்து பெரிகாத்தான் நேஷனல் அரசாங்கம் இருதரப்பு ஆதரவைப் பெறும் என்று கூறினார். இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை வெளியேற்றுவதற்கான முயற்சிகளில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை பிரேரணையின் போது அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவை என்று அவர் கூறினார்.

பிரதமருக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உறுதி செய்ய மக்களவை சபாநாயகருக்கு இஸ்தானா நெகாரா எழுதிய செய்தி, அவர் இன்னும் பெரும்பான்மை ஆதரவை வைத்திருப்பதாக பிரதமர் கூறிய கூற்றுக்களில் அரண்மனை மிகவும் சந்தேகமாக இருப்பதை தெளிவாக நிரூபிக்கிறது.

“இது முன்னோடியில்லாத நிகழ்வுகள் மற்றும் பிரதமரின் அறிக்கைகள் மற்றும் செயல்களின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது” என்று முகமது மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here