மனசோர்வு காரணமாக ரசாயன பொறியிலாளர் மசூதியின் கண்ணாடியை உடைத்து தற்கொலையா?

ஜோகூர் பாரு: ஒரு ரசாயன பொறியாளர் வலது மணிக்கட்டு மற்றும் வலது காலில் காயங்களுடன் பிணமாக காணப்பட்டார்.

28 வயதான இளைஞன் தனது வீட்டுக்கு அருகில் உள்ள மசூதியில்  மூடியிருந்த கண்ணாடியை உடைக்க முயன்ற போது, இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக ஶ்ரீ ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சோஹைமி இஷாக் கூறினார்.

இரகசிய கண்காணிப்பு கேமிரா (சிசிடிவி) பதிவில்  பாதிக்கப்பட்டவர் கண்ணாடி கதவை உடைக்க் இரண்டு முறை குத்தியது கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

சோஹைமியின் கூற்றுப்படி, கடந்த ஆறு மாதங்களாக கோலா பெரங்க், தெரெங்கானுவில் உள்ள தனது குடும்பத்தை சந்திக்க முடியவில்லை என்பதால் அவர் மனச்சோர்வடைந்ததாக நம்பப்படுகிறது என்று கூறினார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here