ஏக்ஸ்டஸி (Ecstasy) விநியோகித்ததாக, ஒரு போலீஸ் உறுப்பினர் மற்றும் 19 வயது வாலிபர் மீது குற்றச் சாட்டு

ஜோகூர் பாரு: கடந்த மாதம் நகர மையத்தில் 181 கிராம் ஏக்ஸ்டஸி (Ecstasy) விநியோகித்ததாக ஒரு போலீஸ் உறுப்பினர் மற்றும் ஒரு வாலிபர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட, L/Kpl C.ஹரேதீஸ்(27), மற்றும் பி.தர்ஷன்(19), ஆகிய இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டு மாஜிஸ்திரேட் சுஹைலா ஷாபி உதீன் முன் வாசிக்கப்பட்ட போது,  இருவரும் தலை குனிந்த படி இருந்தனர்.

குற்றஞ்சாட்டிடப்பட்டவர்கள் சார்பில் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை மற்றும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

குற்றப்பத்திரிகையின்படி, இருவரும் செப்டம்பர் 23 அன்று இரவு 9.45 மணியளவில் இங்குள்ள கோத்தா சவுத்கேயில் உள்ள ஜாலான் பெர்சியரான் சவுத்கே 2 இல் உள்ள ஒரு சுகாதார மையத்திற்கு அருகிலுள்ள, ஒரு கார் நிறுத்துமிடத்தில் இந்த குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு ஆபத்தான மருந்து சட்டம் 1952 ன் பிரிவு 39B (1) இன் கீழ் குற்றமாகும் மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 39B (2) ன் கீழ் தண்டனைக்குரியது, இது குற்றம் நிருபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க வழி செய்யும்.

நெகிரி செம்பிலானில் உள்ள லாபு காவல் நிலையத்தில் பணிபுரியும் L/Kpl C.ஹரேதீஸ் என்பவரை பிரதிநிதித்துவப்படுத்தி எந்த வக்கீலும் ஆஜராகவில்லை, அதே நேரத்தில் ரன்னராக பணிபுரியும் தர்ஷனை பிரதிநிதித்துவப்படுத்தி முஹமட் பிர்தஸ் அட்னான், முஹமட் வாஃபிக் ஹாடி மற்றும் அமர் அஷ்ரஃப் அசுதீன் ஆகியோர் ஆஜரானார்கள்.

இந்த வழக்கு அடுத்த விசாரணைக்காக டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here