மலேசியாவில் உள்நாட்டு வருமான வரி வாரியம் நவம்பர் 9ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலமாக தேசிய வரி கருத்தரங்கை நடத்தவுள்ளது.
1967ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்கள், 2022ஆம் ஆண்டு பட்ஜெட் மூலமாக தாக்கல் செய்யப்படும் விதிமுறைகள் ஆகியவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வையும் தெளிவான தகவல்களையும் வழங்கும் நோக்கத்தில் இந்தக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது.
நவம்பர் 9ஆம் தேதி முதல்கட்ட கருத்தரங்கும் நவம்பர் 11ஆம் தேதி 2ஆம் கட்ட கருத்தரங்கும் நவம்பர் 16ஆம் தேதி 3ஆம் கட்ட கருத்தரங்கும் நடத்தப்படும். இந்த வாரியத்தின் உயர் அதிகாரிகளான அனுபவமிக்க பேச்சாளர்கள் விளக்கவுரை ஆற்றுவார்கள்.
2022 பட்ஜெட் பரிந்துரைகள், மலேசியாவின் மின் வர்த்தக வரி விதிப்பு ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெறும். அக்டோபர் 18ஆம் தேதி தொடங்கி நவம்பர் 16ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக கருத்தரங்கில் பங்கேற்க பதிவு செய்து கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரி https://spk.hasil.gov.my/