நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருந்த கல்லூரி மாணவர்களில் 30 பேர் விடுவிப்பு

நைஜீரியாவில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருந்த கல்லூரி மாணவர்களில் 30 பேர் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவில் உள்ள கெப்பி மாகாணத்தில் பள்ளி ஒன்றில் இருந்து நான்கு மாதங்களுக்கு முன்னர் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில், 70 மாணவர்களை கடத்திச் சென்றனர்.

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அடுத்த சில நாட்களில் ஆறு மாணவர்கள் மீட்கப்பட்டனர். அதேவேளை ஒரு மாணவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். கடத்தப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்த நிலையில், நேற்று 30 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இருப்பினும் மாணவர்கள் எவ்வாறு மீட்கப்பட்டனர் என்ற எந்த விபரத்தையும் நைஜீரிய அரசு இதுவரையில் வெளியிடவில்லை. மீதமுள்ள மாணவர்களை மீட்கும் பணியை தாம் தொடர்வதாக அரசு தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டில் (2021) மாத்திரம் நைஜீரியாவில் 1,400 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அதில் 200 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை’ என, யுனிசெப் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here