சமூக வலைத்தளங்களில் அனைவர் கவனத்தையும் ஈர்க்கும் ஸ்பெயினில் பிறந்துள்ள உலகின் அரியவகை வெள்ளை நிற ஆப்பிரிக்க சிங்கக் குட்டிகள்

ஸ்பெயினில் உள்ள விலங்குகள் காப்பகத்தில் இரண்டு அரியவகை வெள்ளை நிற ஆப்பிரிக்க சிங்கக் குட்டிகள் பிறந்துள்ளன. இவ்வழகிய சிங்கள் குட்டிகள் சமூக வலைத்தளங்களில் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

தெற்கு ஸ்பெயினில் உள்ள விலங்குகள் காப்பகத்தில் இரண்டு அரியவகை வெள்ளை நிற ஆப்பிரிக்கா சிங்கக்குட்டிகள் பிறந்துள்ளன. இந்த குட்டிகள் பிறந்து 8 நாட்கள் ஆகியுள்ளதாகவும் ஆண் மற்றும் வெள்ளை சிங்கக் குட்டிகள் அண்டலூசியா பகுதியில் உள்ள மலைக் கிராமமான ஜிமெனா டி லா புரோன்டெராவில் அவற்றிற்கு உணவளிப்பதற்காக சிறப்பு அறைக்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டன.

1930 களில் வெள்ளை சிங்கங்கள் இனப்பெருக்கத்திற்ககாகவும் வேட்டைக்காகவும் காடுகளில் இருந்து அகற்றப்பட்டு சிறைபிடிக்கப்பட்டன. தற்போது 13 க்கும் குறைவான வெள்ளை சிங்கங்களே அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் வாழ்வதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here