மஇகாவின் புதிய தலைமை செயலாளராக வழக்கறிஞர் RT ராஜா நியமிக்கப்பட்டிருப்பதாக மஇகாவின் தேசியத்தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இன்று அறிவித்தார்.
அண்மையில் மஇகாவில் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் தலைவராக டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், துணைத்தலைவராக டத்தோ ஶ்ரீ சரவணன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.