பொதுப்பணி அமைச்சின் 100 நாள் அடைவு நிலை: 4.28 பில்லியன் ரிங்கிட் மக்கள் நலத் திட்டங்கள் தொற்றுப் பரவல் காலத்தில் நிறைந்த பலனைத் தந்தது

பொதுப்பணி அமைச்சின் 4.28 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பலதரப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு நேரடியான நன்மைகளைச் சேர்த்திருக்கிறது. நாட்டின் அடிப்படை வசதிகள் கட்டமைப்பைப் பொதுப்பணி அமைச்சு தொடர்ந்து முன்னெடுத்து மேம்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டங்கள், கொள்கைகள் அனைத்தும் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதாகவும் கட்டுமானத் தொழில்துறை மேம்பாடு காணவும் பங்காற்றியிருக்கிறது.

மலேசியக் குடும்பம் அபிலாஷை 100 நாள் திட்டத்தின் கீழ் பொதுப்பணி அமைச்சு மேற்கொண்டிருக்கும் அனைத்துத் திட்டங்களும் அமல்படுத்தப்பட்ட பணிகளும் தரம் மேலும் கட்டுமான பணிப் பாதுகாப்பு ஆகிய ரீதிகளில் மக்களுக்கு நேரடியான தாக்கத்தைத் தந்திருக்கிறது.

பொதுப்பணி அமைச்சின் கீழ் இந்த 100 நாள் திட்டங்களானது 12ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் பொருளாதார எழுச்சியை ஏற்படுத்தும் இலக்கைக்கொண்டு பல்வேறு நிர்மாணிப்புத் துறைகளுக்குப் புதிய ஊக்கத்தைப் பெறக்கூடிய வியூகங்களைக் கொண்டிருக்கிறது.

மலேசியக் குடும்பம் அபிலாஷை 100 நாள் இலக்கின் கீழ் அமல்படுத்தப்பட்டிருக்கும் திட்டங்களானது பொதுப்பணி அமைச்சின் கடப்பாடுகளை நிரூபித்திருக்கிறது. மேலும் அனைத்துத் தரப்பினரின் தேவைகளை நிறைவுசெய்யும் சேவைகளையும் அது வழங்கியிருக்கிறது.

1. மலேசியக் குடும்பம் அபிலாஷையின் கீழ் இலக்கு வைக்கப்பட்ட நான்கு துறைகளில் பொதுப்பணி அமைச்சு 100 விழுக்காட்டு அடைவுநிலையை எட்டியிருக்கிறது.

அ. மலேசியக் குடும்பம் அபிலாஷை 1- ஒப்புதல் கடிதம் வழங்குதல்

– பொதுப்பணி அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட 81 நாட்களில் 130 பணி ஒப்புதல் கடிதங்கள் வெளியாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் மொத்த மதிப்பு 4.28 பில்லியன் ரிங்கிட் ஆகும். அசல் இலக்கு 120 ஒப்புதல் கடிதங்கள் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

-எஸ்.எஸ்.டி. எனப்படும் இந்த ஒப்புதல் கடிதங்களானது தகுதிபெற்ற குத்தகையாளர்களுக்கு விரைந்து வழங்கப்பட்டது. இதன்வழி நாட்டின் பொருளாதாரக்
கட்டமைப்பை மறுசீரமைப்புச் செய்வதற்கும் மக்களின் நல்வாழ்வுக்கு வலுச்சேர்ப்பதற்கும் வழிவகுக்கப்பட்டது.

– மாநில ரீதியில் எஸ்எஸ்டி திட்டங்கள் ஒப்படைப்பு:
1. பெர்லிஸ் 6
2. கெடா 11
3. பினாங்கு 6
4. பேராக் 11
5. சிலாங்கூர் 13
6. கூட்டரசுப் பிரதேசம் கோலாலம்பூர் 9
7. நெகிரி செம்பிலான் 9
8. மலாக்கா 6
9. ஜோகூர் 9
10. பகாங் 10
11. திரெங்கானு 12
12. கிளாந்தான் 11
13. சரவாக் 7
14. சபா 7
15. கூட்டரசுப் பிரதேசம் லாபுவான் 3

ஆ. மலேசியக் குடும்பம் அபிலாஷை 2 – கட்டுமான இடப் பாதுகாப்பு

– சிஐடிபி- இன் கட்டுமானத்துறைப் பணிகளுக்கான பாதுகாப்பு நடைமுறைகளுக்குரிய வழிகாட்டுதல் உட்பட நிர்மாணிப்புத்துறை தரத்தை அமல்படுத்துவதற்குப் பொதுப்பணி அமைச்சின் கொள்கை வகுப்பு செயற்குழுவின் அங்கீகாரத்தைப் பெறுவதற்குப் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

– இப்புதிய விதிமுறைகளின் கீழ் கட்டுமானப் பணியிடங்களில் தொழிலாளர்கள் மேலும் பொதுமக்களின் பாதுகாப்பும் சுகாதாரமும் உறுதிசெய்யப்படுகின்ற அதேவேளையில் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் ஒரு கட்டுமானத் திட்டத்தில் பாதுகாப்பும் சுகாதாரமும் உச்சபட்ச கவனத்தை எப்போதும் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் இந்தக் கடப்பாடு மீது பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது.

இ. மலேசியக் குடும்பம் அபிலாஷை 3 – சாலைக்குழிகள் பழுதுபார்த்தல்

– 2021 செப்டம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை தீபகற்ப மலேசியா, சபா, சரவாக், லாபுவான் ஆகியவற்றிலுள்ள கூட்டரசு சாலைகளில் காணப்பட்ட 15,973 சாலைக்குழிகள் (100 விழுக்காடு) 24 மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டிருக்கின்றன.

– சாலைக்குழிகள் விவகாரத்தில் எந்தவொரு நேரத்திலும் முன்னுரிமையும் தரமும் உறுதிசெய்யப்பட வேண்டுமென்று இதற்குப் பொறுப்பேற்றுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் மூத்த பொதுப்பணி அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.

– சாலைக்குழிகள் விவகாரத்தில் ஒருங்கிணைப்பு குத்தகையாளர்களும் சாலைப் பராமரிப்பாளர்களும் ஆக்கப்பூர்வமாகவும் தொடர்புகொள்ளப்பட்ட அடுத்த விநாடியில் பணியில் இறங்கவும் தகவல் கிடைக்கப் பெற்ற அடுத்த நொடியில் முதலாவதாக அந்த இடத்தில் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும் என்பது 2021 பிப்ரவரி 11இல் பொதுப்பணி அமைச்சின் அபிலாஷை வாக்குறுதி நிகழ்ச்சியில் திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டது. (முதல் தொடர்பு, பாதிப்புற்ற பகுதியில் முதலில் இருப்பது, முதலில் செயல்படுவது, தகவல்களை முதலில் மேம்படுத்துவது)

ஈ. மலேசியக் குடும்பம் அபிலாஷை 4 – பணி ஒதுக்குதல்

1. நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது
– ஒரு புதிய நெடுஞ்சாலை நிர்மாணிப்பு மீதான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்
அளிக்கப்பட்டது (பெட்டாலிங் ஜெயா தனியார் நெடுஞ்சாலைத் திட்டம்)

2. டோல் கட்டண மறுசீரமைப்பு

– சாலைப் பயனீட்டாளர்களுக்குச் சுமை தராத மிகக் குறைந்த புதிய டோல் கட்டணத்தை நிர்ணயிக்கும் நோக்கத்தில் பிரதான நெடுஞ்சாலைப் பராமரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொள்கையளவில் ஒப்புதல் பெறப்பட்டது.

மிகப்பெரிய சாதனை:

எஸ்.எஸ்.டி. வெளியிடுவதில் விரைந்து செயல்பட்டது மலேசியக் குடும்ப அபிலாஷையின் முதல் கொள்கையின் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.

– எம்.சி.ஓ. தேசிய மீட்சித்திட்ட காலகட்டத்தில் டெண்டர்களை நிர்வகிப்பதில் எதிர்கொள்ளப்பட்ட சவால்கள்.

– நாடு பொருளாதாரச் சிரமத்தை எதிர்கொண்டிருந்த காலகட்டத்தில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துகொடுப்பதில் திட்ட அமலாக்கத்தில் தேவைக்குரிய அம்சங்களில் நிறைவாகச் செயல்பட்டது.

– மக்களுக்கு விரைவாக மேலும் மிகப்பெரிய தாக்கத்தைத் தரக்கூடிய வகையில் மேம்பாட்டுத் திட்டங்கள் அமைய வேண்டும் என்ற இலக்கை வகுத்துச் செயல்பட்டது.

– அரசாங்கத்தின் இந்த இலக்கு அடையப்படுவதை உறுதிசெய்வதற்கு மிக உயரிய மேலும் ஆக்கப்பூர்வ மான கடப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று அமைச்சின் அனைத்து உயர் அதிகாரிகளுக் கும் பணியாளர்களுக்கும் குறிப்பாக அமைச்சின் கீழ் செயல்படும் பொதுப்பணி இலாகாவுக்கும் (ஜேகேஆர்) உத்தரவிடப்பட்டிருந்தது.

– இந்த அடைவுநிலையின் வெற்றியானது நாட்டிற்கு ஆக்கப்பூர்வமான பலன்களைத் தந்திருக்கிறது.

பொதுப்பணி அமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் புதிய திட்ட அமலாக்கங்களில் எதிர்கொள்ளப்பட்ட சவால்கள்.

1) நகரங்களுக்கிடையிலான நெடுஞ்சாலை அமைப்பை மேம்படுத்துதல்:
பெட்டாலிங் ஜெயா தனியார் நெடுஞ்சாலைத் திட்டம்

2) நடப்பில் உள்ள டோல் கட்டணத்தை நிலைநிறுத்த வேண்டும் அல்லது பயனீட்டாளர்களுக்கு சுமை தராத வகையில் டோல் கட்டணத்தைக் குறைக்க வழிவகுக்கிறது.
இதன்வழி பயனீட்டாளர்கள் டோல் கட்டணத்தில் சேமிப்பை அனுபவிக்கலாம்.

பிரதான சாலை:

நெடுஞ்சாலைப் பயனீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்குச் சுமை தராத வகையில் இருதரப்புக்கும் பாதகம் இல்லாத ஒரு தீர்வு காண்பதற்கு அனைத்து அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கண்டது பிரதான சவாலாக விளங்கியது.

பொதுப்பணி அமைச்சுக்குப் பெருமை தந்தது சாலைக் குழிகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டதுதான்.

சாலைக்குழிகள் கண்காணிப்பு செயலி (ASaPP)

– இந்த (ASaPP) செயலி முறை ஜேகேஆர் அதிகாரிகள், சாலைப் பராமரிப்பு நிறுவனங்கள், கூட்டரசு சாலைகளில் உள்ள குழிகளை விரைந்து கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு ஆன்லைன் வழி தகவல் பெற உதவுகிறது.

– தகவல் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்திற்குள்ளாக சாலைக்குழிகள் மூடப்பட்டு சரிசெய்யப்பட்டன.

– பொதுமக்கள் சாலைக்குழிகள் குறித்து அமைச்சு மேலும் அதன் ஏஜென்சி வழி பொதுப்புகார்ப் பிரிவு நிர்வகிப்பு முறையின் (SISPAA) கீழ் 11 புகார்ப் பிரிவுகள் வழி தகவல் தெரிவிக்கலாம்.

– 2021 நவம்பர் 23ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட #KitaJagaJalanKita பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

– பொதுமக்கள் – துறை சார்ந்த அரசு தரப்பினர் ஒத்துழைப்புடன் மலேசியக் குடும்பம் என்ற உணர்வோடு சாலைகளின் தரத்தைக் கண்காணித்து விரைந்து சரிசெய்வதுதான் மூத்த பொதுப்பணி அமைச்சரின் நம்பிக்கையாக இருக்கிறது.

அமைச்சு இதுவரை திட்டமிட்டு இன்னும் அமல்படுத்தப்படாமல் இருக்கும் திட்டங்களை அமல்படுத்துவதுதான் அடுத்த இலக்கு.

1. கொள்முதல் முறையை மேம்படுத்துதல், எஸ்எஸ்டி எனப்படும் ஒப்புதல் கடிதம் வழங்கும் வரை இடையில் டெண்டர் ஆவணங்கள் மதிப்பீடு முதல் நுட்ப அம்சங்கள் அனைத்தும் விரிவாக ஆய்வுக்குட்படுத்தப்படும்.

2. திட்ட அமலாக்கம், கண்காணிப்பு முறைகள் மேம்படுத்தப்படும்.

3. சாலை அடிப்படை வசதிகள் மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்துவதில் பயனீட்டு வழித்தடத்தை தயார் ஙெ்ய்தல்.

– இப்போதைக்கு அதுபோன்ற பிரத்தியேக வழித்தடம் எதுவும் இல்லை. நடப்பு முறையில் நடைபாதை, சாலையோர (கங்கு) ரிசர்வ் கீழ் அது வைக்கப்பட்டிருக்கிறது.

– இதற்கான அடிப்படைக் காரணம்:

* மராமத்து விவகாரங்களில் கைமாற்றி விடும்போது சாலை மேம்பாட்டுப் பணிகள் அமல்படுத்தப்படுவது தாமதம் ஆகிறது.
* கைமாற்றிவிடுவதில் ஏற்படும் கூடுதல் செலவு
* சாலைகளைப் பலமுறை தோண்டுவது
* பொது மராமத்துப் பணிகளை மேற்கொள்வதற்கு சாலைகளை மூடுவதால் ஏற்படும் சாலைப் போக்குவரத்து நெரிங்ல்.
* முழுமை பெறாத சாலை சீரமைப்புப் பணிகள் காரணமாக ஏற்படும் சாலை விபத்துகள்.
* இவற்றுக்கு முறையான தீர்வு காண்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் ஜேகேஆர் உடன் இணைந்து பணியாற்றும் கிளாஸ்டர் கட்டமைப்பு செயற்குழு சமர்ப்பித்திருக்கும் பரிந்துரைகள் முழு ஆய்வில் உள்ளன.

பயனீட்டாளர்கள் – பொதுமக்கள் பாதுகாப்பே பிரதானம். அதுவே பொதுப்பணி அமைச்சின் மலேசியக் குடும்பம் 100 நாள் இலக்கு.

* பொதுமக்கள் – மற்ற அமைச்சுகளின் 100 நாள் முன்னெடுப்புகள், திட்டங்கள்போல் பொதுப்பணி அமைச்சின் மலேசியக் குடும்பம் 100 நாள் அபிலாஷைகளில் அதன் சொந்த இலக்கைக் கொண்டிருக்கிறது. அடிப்படை வசதிகளின் சௌகரியம், பாதுகாப்பு அதிகரிப்பு மக்களை நேரடியாகச் சென்றடைவதை உறுதிசெய்வதுதான் அந்த இலக்கு.

* கட்டுமானப் பணியாளர்கள் – இத்திட்டத்தின் கீழ் பணியிடங்களில் பொதுமக்கள், தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பணி இடப் பாதுகாப்பை அதிகரித்து விபத்துகளைக் குறைப்பது ஆகும்.

* குத்தகையாளர் – கட்டுமானத்துறை மீட்சியைத் துரிதப்படுத்தி வலுப்பெறச் செய்வதற்கு அனைத்து ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பையும் நல்குதல்.

1. எஸ்எஸ்டி வழங்குதலை துரிதப்படுத்துதல்
– நிறைய வேலை வாய்ப்புகள்
– கட்டுமானத்துறை, ஆலோசனை, கட்டுமானத் துறைக்கான பொருட்களை கொள்முதல் செய்தல், நிர்மாணிப்பு இயந்திரங்கள், மேலும் இதர துறைகளும் பலனடைவது உறுதிசெய்யப்படும்.
– சந்தையில் ரொக்கப் பணப் புழக்கத்தை அதிகரிப்பதற்கு உதவுவது
– நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துதல்
– நாட்டின் அடிப்படை வசதிகள் கட்டமைப்பை தயார்செய்தல்
– மக்களுக்கான வசதிகளை நிறைவேற்றுதல்

2. PJDLink நெடுஞ்சாலை நிர்மாணிப்பை மேம்படுத்துதல்

– இதன்மூலம் PJ Sentral, Zon Industry Seksyen 51, Taman Medan, Taman Teknologi Bukit Jalil ஆகிய பகுதிகளில் பொருளாதார வளர்ச்சிக்கு நேரடிப் பலன் தருவது. 48,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கி 31 பில்லியன் ரிங்கிட் வருமானத்தைத் தந்து பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய தாக்கத்தைத் தரும்.

மலேசியக் குடும்பம் 100 நாள் அபிலாஷைகளின் ஒட்டுமொத்த இலக்கு

மலேசியக் குடும்பக் கோட்பாட்டிற்கு மிகச் சிறந்த பங்களிப்பைப் பொதுப்பணி அமைச்சு தொடரும். 100 நாள் மிகச் சிறந்த அடைவுநிலை இத்துடன் நின்றுவிடாது சாதனைகளும் வெற்றியும் தொடரும். இந்த இலக்கை எட்டுவதில் அமைச்சின் உயர் அதிகாரிகள், ஏஜென்சிகளின் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகள், ஒத்துழைப்புகள் எல்லாக் காலத்திலும் தொடரும் என்பது மூத்த பொதுப்பணி அமைச்சரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here