கோவிட்-19 தடுப்பூசி போட மறுக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூகுள் தீர்மானம்!

நிறுவனத்தின் தடுப்பூசிக் கொள்கைகளுக்கு இணங்கத் தவறுவோர் இறுதியில் தங்கள் வேலையை இழப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களிடம் அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான சுற்றறிக்கையில், கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கும் ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வழங்காதவர்கள் சம்பளம் இல்லாத விடுப்பு வழங்கப்பட்டு, பின்னர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் பணியாளர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், சேவைகளை இயங்க வைக்கவும் தடுப்பூசிக் கொள்கை மிக முக்கியமான ஒன்று” என கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here