வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 32,044 பேர் சிலாங்கூரில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் உள்ள 162 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மந்திரி பெசார் அமிரூடீன் ஷாரி கூறினார்.
முகநூல் பதிவில், காலை 10 மணி நிலவரப்படி 18,858 பேருடன் கிள்ளான் அதிக எண்ணிக்கையைப் பதிவுசெய்தது. இது வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இடைவிடாது பெய்த மழையைத் தொடர்ந்து மாநிலத்தின் பல பகுதிகள் மற்றும் குடாநாட்டின் பிற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
பேராக், கிளந்தான், தெரெங்கானு, பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
சிலாங்கூரில், நீர் நிலைகள் குறையத் தொடங்கியுள்ளன. ஆனால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.