நியூசிலாந்தில் 2022 புத்தாண்டு பிறந்தது!

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் 2022 புத்தாண்டு பிறந்துள்ளது. மக்கள் வாண வேடிக்கைகள், மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.

2021 ஆம் ஆண்டு இன்றுடன் (31) முடிந்து நாளை(ஜன. 1) 2022 ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. உலகின் நேரக் கணக்கின்படி முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.

மலேசிய நேரப்படி இன்று மாலை 7.00 மணிக்கு நியூசிலாந்தின் ஆக்லாந்தில் புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஆக்லாந்தில் ஸ்கை டவரில் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. மக்களும் ஆரவாரத்துடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here