ஓமிக்ரான் தொற்று கண்ட 12 உம்ரா யாத்ரீகர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் – சுகாதார அமைச்சு தகவல்

ஓமிக்ரான் மாறுபாடு இருப்பது உறுதிசெய்யப்பட்ட 12 உம்ரா யாத்ரீகர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்று சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இந்த மலேசியர்கள் எவ்வித தடுப்பூசி பதிவும் இல்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்லவும், உம்ராவை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது எப்படி என்பதை அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சகத்தின் ஆரம்ப விசாரணையின் அடிப்படையில், நாட்டில் இதுவரை ஓமிக்ரான் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்ட 122 பேரில், அவர்களில் 17 பேருக்கு தடுப்பூசி போடப்படவில்லை” என்று அவர் கூறினார்.  பின்னர் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது. அதில் 12 பேர்  உம்ரா யாத்ரீகர்கள்.

இது சரியல்ல, தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே உம்ரா செய்ய அனுமதிக்க வேண்டும். பயண முகவர்கள் ஏஜென்சிகள் உட்பட பங்குதாரர்களுடன் இணக்கம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து நாங்கள் இதை விவாதிப்போம் என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். இந்த குழுக்களுக்கு ஏதேனும் அடிப்படை உடல்நலக் கவலைகள் உள்ளதா அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என்பதை அமைச்சகம் ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here