அரசாங்கத்தின் பரிவு உதவி; வௌ்ளப் பேரிடர் மக்கள் நன்றி

பகாங் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மெந்தகாப், பெரா நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள திரியாங் மாவட்டத்தில் மக்களுக்கு மத்திய அரசாங்கம் ரொக்க உதவிகளை வழங்கியது.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்திருக்கும் இந்த உதவித் திட்டங்களுக்கு மக்கள் நன்றி பாராட்டி வருகின்றனர்.

இந்த உதவியானது பாதிக்கப்பட்ட மக்களின் நாடித் துடிப்பை அரசாங்கம் உணர்ந்து கேட்டுள்ளது என்பதை நிரூபித்துள்ளது என்று மெந்தகாப் தாமான் ஸபிடினைச் சேர்ந்த முரளிதரன் கூறினார்.

அண்மையில் பண்டார் மெந்தகாப் தேசிய வகை தமிழ்ப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வெள்ள நிவாரண மையத்திற்கு வருகை புரிந்த பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அங்கு தங்கியிருந்த 78 இந்தியக் குடும்பங்களுக்கு ரொக்க உதவிகளை வழங்கினார்.

அதேபோல் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பெராவில் உள்ள திரியாங்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 28 இந்தியக் குடும்பங்களுக்கு பிரதமர் நேரில் உதவிகளை வழங்கினார்.

மெந்திரி திரியாங் தமிழ்ப்பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வெள்ள நிவாரண மையத்திற்கு வருகை புரிந்த அவர், அங்குள்ள மக்களின் நலன்களைக் கேட்டறிந்து ஆறுதல் சொல்லி உதவிகளை வழங்கினார்.

வெள்ளப் பேரிடரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ள மக்களுக்குப் பல்வகையான உதவிகளை மத்திய அரசாங்கம் வழங்கி இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று மெந்தகாப், டாமாய் தாகாவைச் சேர்ந்த திருமதி வள்ளி குறிப்பிட்டார்.

திருமதி வள்ளி

 மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இங்கு வெள்ள நிலைமை மிக மோசமாக இல்லை என்ற போதிலும் அரசாங்கத்தின் கனிவும் பரிவும் மனத்தை நெகிழ வைக்கின்றது என்று தாமான் ஸபிடினைச் சேர்ந்த திருமதி பொம்மிமா சின்னசாமி தெரிவித்தார்.

திருமதி பொம்மிமா

இந்த வெள்ளத்தில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள மொத்த இழப்புகளைத் தாங்கள் இன்னும் கணக்கிடவில்லை என்ற போதிலும் அரசாங்கம் வழங்கி இருக்கும் இந்த உதவி தங்களின் சுமைகளைத் தற்காலிகமாக இறக்கி வைத்துள்ளது என்று கஸ்தூரி ஜேம்ஸ் சொன்னார்.

கஸ்தூரி

வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உற்சாகம் தரும் வகையில் அரசாங்கத்தின் உதவி அறிவிப்புகள் இருக்கின்றன என்று திருமதி திவிலா ஆறுமுகம் தெரிவித்தார்.

திருமதி திவிலா

இழப்புகள் பெரியதோ சிறியதோ என்பதை அளவுகோலாகக் கொண்டிராமல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகளை அரசாங்கம் வழங்கி இருப்பதை மனப்பூர்வமாகப் பாராட்ட வேண்டும் என்று நாராயணன் சிதம்பரம் சொன்னார்.

நாராயணன்

அரசியல், இனம், சமயம் என்ற எல்லைகளைக் கடந்து மக்களின் துயரங்களை உணர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி இந்த உதவிகளை வழங்கி இருக்கிறார் என்றே தாம் நம்புவதாக கமலநாதன் சுப்பையா கூறினார்.

கமலநாதன்

இந்த முறை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் வீட்டில் இருந்த அனைத்துத் தளவாடப் பொருட்களும் மின்சாரப் பொருட்களும் பாதிக்கப்பட்டன என்று மெந்தகாப் லஞ்சாங்கைச் சேர்ந்த ஆர். ரவிசந்தர் கூறினார்.

ரவிச்சந்தர்

துயரங்களை எதிர்கொண்டாலும் மத்திய அரசாங்கம் உரிய நேரத்தில் வழங்கி இருக்கும் பரிவு உதவிகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என்று திருமதி மீனாட்சி குறிப்பிட்டார்.

திருமதி மீனாட்சி

உதவித் தொகையைக் கொண்டு பழுதடைந்த பொருட்களுக்குப் பதிலாக புதிய தளவாடப் பொருட்களை வாங்க உதவியாக இருக்கும் என்று காளியப்பன் சொன்னார். மேலும் திருமதி கல்யாணி கோவிந்தன், ஆர். ரவிசந்தர், மனோகரன், பத்மநாபன் வேலாயுதம் ஆகியோரும் அரசாங்கத்திற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

முரளிதரன்

மனோகரன்

திருமதி கல்யாணி

காளியப்பன்

பத்மநாதன்

இவர்கள் அனைவருக்கும் மத்திய அரசாங்கத்தின் உதவி நிதியாக தலா 1,500 ரிங்கிட் ரொக்கம் வழங்கப்பட்டது. பிரதமர் இத்தொகையை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here