அபுதாபி விமான நிலையம் மீது தாக்குதல்; 2 இந்தியப் பிரஜைகள் உட்பட மூவர் பலி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வரும் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இன்று காலை அபுதாபியில் மூன்று எரிபொருள் டேங்கர்கள் மற்றும் விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட, ட்ரோன் மூலம் நடந்த தாக்குதல் காரணம் என அபுதாபி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இத் தாக்குதலில் விமான நிலையத்தில் உள்ள 3 எரிபொருள் தாங்கிகள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலுக்கு ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அமைப்பு முன்னதாக கடந்த 2019-இல் சவூதி அரேபியாவில் அமைந்திருந்த இரண்டு எரிபொருள் உற்பத்தி கூடத்தின் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here