ஷா ஆலம் சுங்கை கண்டிஸ் அருகே உள்ள sluice gate கழிவுப் பொறியில் அரை நிர்வாண நிலையில் பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.
ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் பஹாருடின் மத் தாயிப் கூறுகையில், sluice gate பராமரிப்பாளர் காவல்துறையைத் தொடர்புகொள்வதற்கு முன்பு உடலைக் கவனித்தார்.
30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கைகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் கால்சட்டை கொண்டு அப்பெண்ணின் கையை கட்ட பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
உடலை அடையாளம் காண முடியவில்லை. பாதிக்கப்பட்ட பெண் கருப்பு ஸ்லீவ்லெஸ் சட்டை அணிந்திருந்தார் மற்றும் அவரது இடது மோதிர விரலில் சிவப்பு கல் மோதிரம் இருந்தது. பாதிக்கப்பட்டவரின் உயரம் சுமார் 150 செ.மீ.என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் ஏழு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்று நம்பப்படுகிறது. மேலும் வெளிப்புற உடல் காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டம் 302ஆவது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக பஹாருதீன் கூறினார். மேலும், பொதுமக்கள் மரணம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் விசாரணை அதிகாரி ஷாஸ்ரினை 03-5520 2022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.