தடுப்புக் காவலில் இறந்த 7 பேரின் மரணத்திலும் குற்றவியல் கூறுகள் இல்லை – PDRM தகவல்

போலீஸ் காவலில் இறந்த ஏழு இறப்புகளில் குற்றச் செயல் இல்லை என்பதனை  ராயல் மலேசியா காவல்துறை (PDRM) உறுதிப்படுத்தியுள்ளது.  விசாரணையில் அவை அனைத்தும் குற்றவியல் கூறுகளுடன் தொடர்புடையவை அல்ல என்று கண்டறியப்பட்டுள்ளது.

புக்கிட் அமான் ஒருமைப்பாடு மற்றும் தரநிலைகள் இணக்கத் துறை (JIPS) இயக்குநர் டத்தோ அஸ்ரி அஹ்மட் கூறுகையில், பதிவான ஏழு வழக்குகளில் நான்கு வழக்குகள் லாக்கப்பில் இறந்தவை. மற்ற இரண்டு வழக்குகள் மருத்துவமனையில் மரணம் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தொடர்புடையவை என்று அவர் மேலும் கூறினார். மற்றொரு மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த மரணம் குறித்த ஆரம்ப கட்ட விசாரணையில் குற்றச் செயல் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் JIPS இன் கீழ் அமைக்கப்பட்ட காவலில் உள்ள மரணங்கள் மீதான குற்றப் புலனாய்வுப் பிரிவு (USJKT), போலீஸ் காவலில் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் என்று அவர் உறுதியளித்தார். விசாரணை எந்த சமரசமும் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும் என்று புக்கிட் அமானில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

போலீஸ் காவலில் உள்ளவர்களின் உடல்நிலையை கண்காணிக்க போலீஸ் லாக்கப்களில் ஒருங்கிணைந்த கிளினிக் அமைக்கப்பட வேண்டும் என்று PDRM முன்மொழிந்ததாக அஸ்ரி கூறினார். தற்போதைய Standard Operating Procedures (SOP) கீழ், உடல்நலப் பிரச்சனைகள் உள்ள போலீஸ் காவலில் உள்ள நபர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here