டிஸ்கோ டான்ஸை பிரபலப்படுத்திய இசையமைப்பாளர் பப்பி லஹிரி மரணம்

மூத்த பாடகர் மற்றும் இசையமைப்பாளர் பப்பி லஹிரி உடல்நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் காலமானார். மும்பை ஜூஹூவில் உள்ள க்ரிட்டிகேர் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு அவர் காலமானதாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டது. 69 வயதாகும் பப்பி லஹிரியின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை நடைப்பெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

“லாஹிரி உடல்நலக்குறைவால் ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, திங்கட்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் செவ்வாய்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்தது. அதனால் அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு மருத்துவரை அழைத்தனர். பின்னர் லஹிரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அப்போது அவருக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. நள்ளிரவுக்கு சற்று முன்பு மூச்சுத் திணறல் காரணமாக அவர் இறந்து விட்டார்” என மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் தீபக் நம்ஜோஷி” முன்னணி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தெரிவித்தார்.

1970-80-களின் பிற்பகுதியில் ‘சல்தே சல்தே’, ‘டிஸ்கோ டான்சர்’ மற்றும் ‘ஷராபி’ போன்ற பல படங்களில் பிரபலமான பாடல்களை பப்பி லஹிரி கொடுத்தார். கடைசியாக 2020-ஆம் ஆண்டு வெளியான ‘பாகி 3’ படத்துக்காக பாங்காஸ் என்ற பாடலையும் பாடியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here