36 மணி நேரத்திற்கும் மேலான தேடுதலின் பின், வலையில் சிக்கியிருந்த சுக்ரியின் சடலம் மீட்கப்பட்டது

பெசூட், பிப்ரவரி 17 :

இங்குள்ள தெம்பிலா பாலம் அருகே, நேற்று ஆற்றில் விழுந்த சுக்ரி வஹாப்பின் உடல் 36 மணி நேரத்திற்கும் மேலான தேடுதல் நடவடிக்கையின் பின்னர், இன்று  பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டது.

திரெங்கானு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குநர் முஹமட் பஸ்ரி காமராஸ்மான் கூறுகையில், வாகனம் விழுந்ததாக கூறப்பட்ட இடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில், மாலை 6.09 மணியளவில் பொதுமக்கள் அமைத்த வலையில் அவரது உடல் சிக்கியதாகக் கூறினார்.

மீட்புப் பணியாளர்கள் படகில் உடல்களை எடுத்துக் கொண்டு, மாலை 6.40 மணிக்கு ஆற்றங்கரைக்கு வந்தனர்.

பாதிக்கப்பட்ட சுக்ரியின் சடலம், குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக பெசூட் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது என்று அவர் கூறினார்.

குடியிருப்பாளரான  முகமட் காலிட் சுலைமான், 55, என்பவரே வலையில் சிக்கியிருந்த சுக்கிரியின் உடலை முதலில் கண்டார் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here