நாளை ஆரம்பமாகும் SPM தேர்வில் 407,097 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்

கோலாலம்பூர், மார்ச் 1 :

நாளை ஆரம்பமாகும் SPM 2021 தேர்வுக்கான எழுத்துத் தேர்வில் மொத்தம் 407,097 விண்ணப்பதாரர்கள் நாடு முழுவதும் 3,382 தேர்வு மையங்களில் எழுதுவார்கள் என்று தேர்வு வாரியம் மற்றும் மலேசிய கல்வி அமைச்சகம் (MOE) தெரிவித்தது.

இந்த தேர்வு 2022 மார்ச் 2 முதல் 29 வரை நடைபெறும்.

“இந்த தேர்வினை சுமூகமாக நிர்வகிக்கவும் மற்றும் செயல்பாட்டை உறுதி செய்வதற்கும் மொத்தம் 50,514 தேர்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

“SPM தேர்வுக்கான தேதி, நேரம், குறியீடு மற்றும் தேர்வுத் தாள்கள் மற்றும் தேர்வின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றிய தகவல்களுக்கு SPM 2021 தேர்வுக்கான எழுத்துத் தேர்வு கால அட்டவணையைப் பார்க்குமாறு தேர்வு வாரியம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நினைவூட்ட விரும்புகிறது.

“தேர்வு அட்டவணையை http://lp.moe.gov.my இல் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்” என்று அது இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், பரீட்சார்த்திகள் தங்களின் அடையாள ஆவணங்கள் (மை கார்ட் ) மற்றும் பரீட்சை பதிவு அறிக்கையை பரீட்சை மையத்திற்கு கொண்டு வர வேண்டும் எனவும் நினைவூட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here