டத்தோஶ்ரீ அன்வாரின் சகோதரர் ருஸ்லி காலமானார்

போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின்  சகோதரர் ருஸ்லி தனது 74வது வயதில் செலாயாங் மருத்துவமனையில் இன்று காலமானார். எதிர்க்கட்சித் தலைவரான பிகேஆர் தலைவர் இன்று டுவிட்டர் மூலம் இந்த விஷயத்தைத் தெரிவித்தார்.

எனது சகோதரர் ருஸ்லி இப்ராஹிம் இப்போதுதான் செலாயாங் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் பிரார்த்திக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் என்றார்.

கடந்த சில வாரங்களாக செலாயாங் மருத்துவமனையில் இருந்த பின் நேற்று மாலை 2.20 மணியளவில் முதுமை காரணமாக காலஞ்சென்ற ருஸ்லி காலமானார் என்றும், உடல் இன்று இரவு அம்பாங்கில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்வதற்கு முன்பு அல்-உபுதியா பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் அறியப்படுகிறது. .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here