சிலாங்கூர், ஜோகூர் மற்றும் மலாக்காவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 284 பேராக குறைவு

கோலாலம்பூர், மார்ச் 11 :

ஜோகூர், மலாக்கா மற்றும் சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நேற்று மாலையில் நிவாரண மையங்களில் தங்கியிருந்த 83 குடும்பங்களைச் சேர்ந்த 327 பேருடன் ஒப்பிடுகையில், இன்று காலை 73 குடும்பங்களைச் சேர்ந்த 284 பேராகக் குறைந்துள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை முகாமைத்துவத்தின் (NADMA) தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் (NDCC) இன்று காலை அதன் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட தேசிய பேரிடர் சம்பவங்கள் பற்றிய சமீபத்திய அறிக்கையில் இதனைத் தெரிவித்தது.

ஜோகூரில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 14 நபர்கள் இன்னும் SK Sungai Linau,குளுவாங்கிலுள்ள நிவாரண மையத்தில் தங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மலாக்காவில், ஜாசின் மாவட்டத்தில் மார்ச் 8 அன்று ஒரே ஒரு நிவாரண மையம் மட்டுமே திறக்கப்பட்டது, அதாவது SK பாரிட் பெங்குலுவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சிலாங்கூரில், கோலா லங்காட் மற்றும் செப்பாங் ஆகிய மாவட்டங்களில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அங்கு இன்னும் 5 நிவாரண மையங்கள் செயல்பாட்டிலுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here