ஜோகூர் சட்டமன்ற உறுப்பினர்களாக 10 பேர் பதவியேற்பு- மஇகா சார்பில் ரவீன் குமார் பதவியேற்றார்

ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர் முன்னிலையில் மொத்தம் 10 ஜோகூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில செயற்குழு உறுப்பினர்களாக பதவியேற்றனர். இஸ்தானா புக்கிட் சிரினில்  உள்ள Balai Menghadap பணி நியமனம் விழா சனிக்கிழமை (மார்ச் 26) காலை நடைபெற்றது.

விழாவில் துங்கு மஹ்கோத்தா ஜோகூர் துங்கு இஸ்மாயில் இப்னி சுல்தான் இப்ராஹிம் மற்றும் துங்கு தெமெங்கோங் ஜோகூர் துங்கு இட்ரிஸ் இஸ்கந்தர் அல்-ஹாஜ் இப்னி சுல்தான் இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிதாக பதவியேற்ற ஜோகூர் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் டத்தோ ஜஹாரி சரிப் (புலோ கசாப்), டத்தோ முகமட் ஜஃப்னி முகமட் ஷுகோர் (புக்கிட் பெர்மைய்), கே. ரவீன் குமார் (தெங்காரோ), கைரின் நிசா இஸ்மாயில் (சீரோம்), முகமட் ஹைரி முகமட் ஷா (லார்கின்) மற்றும் முகமது ஃபர்ட் முகமது காலித் (செமாரா), லிங் தியான் சூன் (யோங் பெங்), லீ டிங் ஹான் (பாஃலோ), முகமது ஃபாஸ்லி முகமட் சாலே (புக்கிட் பாசீர்) மற்றும் நோர்லிசா நோ (ஜோகூர் லாமா).

மச்சாப் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஒன் ஹபீஸ் காசி 19வது ஜோகூர் மந்திரி பெசாராக மார்ச் 15 அன்று பதவியேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here