கோலாலம்பூர், ஏப்ரல் 11 : கோவிட்-19 சிகிச்சைக்காக பயன்படுத்தும் 48,000 பாக்ஸ்லோவிட் ( Paxlovid) மருந்தை மலேசியா பெற்றுள்ளது என்று சுகாதார தலைமை இயக்குநர்
ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
அவரைப் பொறுத்தவரை, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது என்றார்.
ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்படாத மற்றும் கடுமையான கோவிட்-19 அறிகுறிகளை கொண்ட அதிக ஆபத்தில் உள்ள வயதினருக்கும் இது பொருத்தமானது என்று அவர் கூறினார்.
“இது கோவிட்-19 தடுப்பூசிக்கு மாற்றாகவோ அல்லது கோவிட்-19 நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான மாற்றாகவோ கருதப்படவில்லை. மாறாக இது கோவிட் -19 வைரஸை ஒழிக்க பயன்படும் இன்னுமொரு ஆயுதம்” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.