கோலாலம்பூரில் காணாமல் போன கார் லங்காவியில் கண்டுபிடிப்பு ; மூவர் கைது!

லங்காவி, ஏப்ரல் 16 :

கோலாலம்பூரில் காணாமல் போனதாகக் கூறப்படும் தங்க மஞ்சள் நிற தோயோத்தா வியோஸ் கார், கடந்த புதன்கிழமை இங்குள்ள கம்போங் உலு மலாக்காவில் 500 கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது.

லங்காவி மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஷரிமான் ஆஷாரி கூறுகையில், இந்த கார் திருட்டு தொடர்பில் 16 முதல் 32 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களையும் போலீசார் கைது செய்தனர் என்றார்.

“கோலாலம்பூரின் சாலாக் செலாத்தான் பாருவில் உள்ள ஒரு வீட்டின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, காணாமல் போனதாகக் கூறப்படும் அந்தக் கார் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், கண்டெடுக்கப்பட்ட கார் விசாரணைக்காக கோலாலம்பூரில் உள்ள செராஸ் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் ஒப்படைக்கப்படும் என்று ஷரிமான் கூறினார்.

“இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 379A பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது, குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here