நாசா வெளியிட்ட ஒரு போட்டோ.. அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா?

நியூயார்க்: அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்ட ஒரு புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பல்வேறு விண்வெளி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம்.

நாசாவின் பல்வேறு ஆராய்ச்சி விண்கலன்கள், probe கருவிகள், தொலைநோக்கிகள் உதவியுடன் இதுபோன்ற வியக்க வைக்கும் புகைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம்.இந்த நிலையில்தான் செவ்வாய் கிரகத்தில் இருந்து நாசா ஒரு ஆச்சர்யம் அளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது.

செவ்வாய் கிரகம்

பொதுவாக நிலவு, செவ்வாய் கிரகம் தொடங்கி பல கோள்கள், துணை கோள்களில் பெரிய குழிகள் காணப்படும். இந்த குழிகள் பல காரணங்களுக்காக ஏற்படும். இப்படி கிரகங்களில் காணப்படும் குழிகளை crater என்று அழைப்பார்கள். நிலவில் நாம் காணும் வடை சுடும் பாட்டியும் கூட இந்த crater குழிகள்தான். சரி விஷயத்திற்கு வருவோம் தற்போது நாசா வெளியிட்டு இருக்கும் புகைப்படம் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் Mars crater குழிகளின் புகைப்படம் ஆகும்.

பெரிய குழி

செவ்வாய் கிரகத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும் நாசாவின் Mars Reconnaissance Orbiter என்ற ஆர்பிட்டரில் இருக்கும் அதி நவீன கேமராவான High-Resolution Imaging Science Experiment (HiRISE) மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படத்தில் என்ன சிறப்பு என்றால் செவ்வாயில் அமைந்து இருக்கும் அந்த குழிகள் சரியாக ஜீரோ டிகிரி தீர்க்கரேகையில் அமைந்து இருக்கும் குழிகள் ஆகும்.

என்ன புகைப்படம்

அதாவது செவ்வாய் கிரகத்தில் சரியாக ஜீரோ டிகிரி தீர்க்க ரேகையில் பெரிய குழிகள் உள்ளன. இந்த புகைப்படமே ஒரு பிக்சலுக்கு 50 சென்டி மீட்டர் என்ற அளவில் எடுக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் புகைப்படத்தில் இருப்பதை விட நிஜத்தில் இந்த குழி பல மடங்கு பெரியதாக இருக்கும். இந்த புகைப்படம் பார்க்க ஒரு ஏலியனின் கால் தடம் போலவே இருப்பது தோன்றுகிறது. பெரிய ஏலியன் ஒன்று இங்கு கால் வைத்தது போல இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here