105 குடியிருப்பு வீடுகளில் தீப்பரவல் ; 900 பேர் வீடுகளை இழந்தனர்

செம்பூர்னா, ஏப்ரல் 21 :

நேற்றிரவு கம்போங் பாங்காவ்-பாங்காவ்வில் உள்ள கிராமத்தின் 150 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின. இதனால் 900 பேர் தமது வாழ்விடங்களை இழந்துள்ளனர்.

நேற்றிரவு 11.35 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 105 தற்காலிக குடியிருப்பு பகிர்ந்தளிப்பு வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகின. 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 900 பேர் வீடுகளை இழந்துள்ளதாக மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் எடோன் மக்கேல் தெரிவித்தார்.

தீயை அணைக்கும் பணி நள்ளிரவு 12.46 மணிக்கு ஆரம்பமாகி, அதிகாலை 3.05 மணிக்கு முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அவர் கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட அனைவரும் இப்போது செம்பூர்னா இளைஞர் மற்றும் விளையாட்டு அரங்கில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here