பெல்லாவின் விஷயத்தில் நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவது அபத்தமானது என்கிறார் ரீனா

பெல்லா எனப்படும் டவுன் சிண்ட்ரோம் குறைப்பாடு இருந்த பதின்ம வயது சிறுமியின் புறக்கணிப்பு மற்றும் துஷ்பிரயோக வழக்கு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் மறுத்துள்ளது.

கடந்த ஆண்டு ரூமா போண்டா நிறுவனர் சிட்டி பைனுன் அப்துல் ரசாலியின் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் சட்டப்பூர்வ உரிமையை பறித்ததும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அடங்கும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ ரீனா ஹாருன் கூறினார். அதுமட்டுமல்லாமல், தனது அமைச்சகமும்  சமூக நல் இல்லத்திற்கு சீல் உத்தரவை விதித்ததாகவும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் கூட்டு அறிவிப்பை வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.

நாங்கள் உணர்ச்சிகரமான வழிகாட்டுதலையும் ஆதரவையும் (பெல்லாவிற்கு) வழங்கியுள்ளோம். ஏனெனில் அவர் மனஉளைச்சலுக்கு ஆளானார். அவர் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வியாழன் (ஏப்ரல் 21) Dewan Komuniti Desa Pandan மற்றும் Syawal உதவி வழங்கும் விழாவிற்குப் பிறகு, “நாங்கள் சட்டத்தையும் (தத்தெடுப்புக்காக) கடுமையாக்கியுள்ளோம். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் மௌனமாக இருப்பது ஏன் என்ற கேள்விக்கு, பதின்ம வயதினரின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காக  இந்த திருத்தங்கள் என்று ரீனா கூறினார்.

இதற்கு முன்பு (நாங்கள் செய்த) விஷயங்களை நாங்கள் பகிரங்கப்படுத்தவில்லை, ஆனால் (அது) நாங்கள் எதையும் செய்யவில்லை அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அர்த்தம் இல்லை என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here