சொந்த ஊர் மற்றும் கிராமங்களுக்குத் திரும்பும் முன் RTK-AG சோதனை செய்யுங்கள் என்கிறார் கிளாந்தான் மந்திரி பெசார்

கோத்தா பாரு, ஏப்ரல் 24 :

நோன்புப்பெருநாளைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர் மற்றும் கிராமங்களுக்குத் திரும்புபவர்கள் அதாவது கிளாந்தான் மாநிலத்திற்கு வெளியே வசிக்கும் கிளந்தானியர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், கோவிட்-19 ஆர்டிகே-ஏஜி பரிசோதனையைச் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கும், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பங்களை அந்த வைரஸிலிருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் இந்த முயற்சி சிறந்த வழிகளில் ஒன்றாகும் என்று கிளாந்தான் மந்திரி பெசார் டத்தோ அஹ்மட் யாக்கோப் கூறினார்.

“நாங்கள் இன்னும் கோவிட்-19 நோயை 100 விழுக்காடு ஒழிக்கவில்லை, ஆனால் அவற்றை தடுக்க முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான தனி நபர் இடைவெளியைப் பின்பற்றுவதோடு , குறிப்பாக உறவினர்களின் வீடுகள் போன்ற பலவற்றில் கூடும் போது, ​​நீங்கள் முழுமையாக தடுப்பூசி போட்டு, பூஸ்டர் டோஸ் பெற்றிருந்தாலும் ஏனைய SOPகளைப் பின்பற்றவும், ” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here