டெங்கில், ஏப்ரல் 26 :
நோன்புப்பெருநாளை முன்னிட்டு, முக்கிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் அனைத்து சாலை பராமரிப்பு பணிகளும் ஏப்ரல் 29 முதல் மே 9 வரை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசூப் கூறுகிறார்.
இது கொண்டாட்ட கால சாலை நெரிசலைத் தவிர்க்கும் என்று கூறிய பணி அமைச்சர், தேவைப்பட்டால் முக்கிய நெடுஞ்சாலைகளில் அவசர சாலைப் பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும் “சாலைப்பயணர்களுக்கு தேவையற்ற சம்பவங்கள் நிகழாதிருப்பதை உறுதிச்செய்ய, ரோந்து பணியை அதிகரிக்க நெடுஞ்சாலைத்துறை சலுகையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
“சுகாதார அமைச்சகம், ரோயல் மலேசியா காவல்துறை (PDRM), சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ), தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் மலேசியக் குடிமைத் தற்காப்புத் துறை (JPAM) ஆகியவற்றை உள்ளடக்கிய அவசரகால குழுக்கள் அதிக ஆபத்துள்ள இடங்களில் என அறியப்பட்ட இடங்களில் நிறுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.
சமீபத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து புதுப்பிப்புகளுக்கு 1800-88-7752 என்ற எண்ணில் மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் போக்குவரத்து கண்காணிப்பு மையத்தை அழைக்குமாறு நெடுஞ்சாலை பயனர்களுக்கு ஃபாடில்லா அறிவுறுத்தினார்.
“நெடுஞ்சாலைப் பயனர்கள் LLM மற்றும் நெடுஞ்சாலை சலுகையாளர்களால் வழங்கப்பட்ட பயண நேர ஆலோசனையைப் (TTA) பெற்று, சுமூகமான பயணத்தை உறுதிசெய்ய பரிந்துரைக்கப்படுகின்றனர்,” என்று அவர் மேலும் கூறினார்.