ஹரிராயாவின் போது 10,355 வாகனங்கள் சமிஞ்சை விளக்கில் நிற்காமல் சென்றுள்ளது: ஜேபிஜே

ஹரிராயா பெருநாள் விடுமுறையின் போது சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) 35,600 க்கும் மேற்பட்ட வேகக் குற்றங்கள் AWAS போக்குவரத்து கேமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுமார் 1.5 மில்லியன் வாகனங்கள் போக்குவரத்து விளக்குகளில் AWAS கேமராக்கள் வழியாக சென்றன. அதில் 10,355 வாகனங்கள் சமிஞ்சை விளக்கில் நிற்காமல் சென்றது பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 29 முதல் நடத்தப்பட்ட ஹரி ராயா போக்குவரத்து நடவடிக்கையின் ஏழு நாட்களில் நெடுஞ்சாலைகளில் உள்ள கேமராக்களில் மொத்தம் 4.7 மில்லியன் வாகனங்கள் கண்டறியப்பட்டதாக ஜேபிஜே செய்தித் தொடர்பாளர் பதிவு செய்தார்.

அவாஸ் கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்ட சமிஞ்சை விளக்கை அதிவேகமாக கடப்பது உள்ளிட்ச குற்றங்கள் பதிவு செய்யப்பட்ட ஐந்து முக்கிய குற்றங்களில் அடங்கும். அவை நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டவை, மேலும் அவைகளுக்கு சம்மன் செலுத்த முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு RM2,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.

இரண்டு குற்றங்களையும் (வேகம் மற்றும் சிமிஞ்சை விளக்கு மீறல்) செய்த சாலைப் பயனர்களுக்கு ஒவ்வொரு குற்றத்திற்கும் நான்கு புள்ளிகள் குறைக்கப்படும். டிமெரிட் புள்ளிகள் ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் அல்லது ரத்து செய்ய வகை செய்யும்.

ஜே.பி.ஜே, அனைத்து சாலைப் பயனாளர்களும், அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்றும், இறுதியில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலையில் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here