நெடுஞ்சாலையில் யு-டர்ன் செய்த வேன் மீது கார் மோதியதில் தாய், மகன் படுகாயம்

கோத்தா திங்கி, மே 23 :

இங்குள்ள சேனாய்-டேசாரு நெடுஞ்சாலையின் 59.7 ஆவது கிலோமீட்டரில் திடீரென யு-டர்ன் செய்த வெளிநாட்டவர் ஓட்டிச் சென்ற வேன் மீது, அவர்கள் பயணித்த கார் மோதியதில் இரண்டு வயது மகனும் அவனது தாயும் காயமடைந்தனர்.

கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஹுசின் ஜமோரா கூறுகையில், பிற்பகல் 2.55 மணியளவில் நடந்த சம்பவத்தில், 29 வயது பெண் ஓட்டிச் சென்ற ஹோண்டா HRV கார் மற்றும் 33 வயது மியன்மார் ஆடவர் ஓட்டிச் சென்ற Ford Econovan வேன் சம்பந்தப்பட்ட விபத்து நடந்ததாகக் கூறினார்.

“டேசாரு திசையிலிருந்து வந்த வேனை ஓட்டுநர் திடீரென யு-டர்ன் செய்ததால், சேனாய் திசையிலிருந்து வந்த காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு காரை வேறு திசைக்கு திருப்ப நேரமில்லாமல், வேனின் இடது பக்கத்தின் நடுப் பகுதியில் மோதியதால் விபத்து ஏற்பட்டது. .

“அப்பகுதியில் புல் வெட்டி முடித்த வேன் டிரைவர், வேலையைத் தொடர நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 60 க்கு செல்ல விரும்பியதால், அந்த பகுதியில் யூ-டர்ன் செய்ய அனுமதிக்கப்படாத இடத்தில் அவர் யூ-டர்ன் செய்ததாக ” அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கார் ஓட்டுநருக்கு வாய், இடது மற்றும் வலது கைகளில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவரது மகனின் இடது நெற்றியில் கன்னங்களில் கீறல்கள் மற்றும் இடது கண்ணில் காயங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

வேனின் ஓட்டுநருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, மேலும் சாலை போக்குவரத்து விதிகள் 1959 (LN 166/59) விதி 13ன் கீழ் இவ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, விபத்தின் 32 வினாடிகள் கொண்ட வீடியோ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது, அங்கு நெட்டிசன்கள் வேன் டிரைவரின் செயலால் கோபமடைந்து, அவரை விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here