ஸூரைடா பெர்சத்துவில் இருந்து வெளியேறி பார்ட்டி பங்சா மலேசியாவில் இணைந்தார்

 அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஸுரைடா கமாருடின், புதிதாக உருவாக்கப்பட்ட பார்ட்டி பங்சா மலேசியாவில் (PBM) சேருவதற்காக முஹிடின் யாசினின் பெர்சத்துவில் இருந்து விலகுகிறார். அமைச்சரவையில் இருந்து விலகுவது தொடர்பாக விரைவில் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோபை சந்திக்கவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் பொருட்கள் அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆயினும்கூட, PBMஇன் நிலைப்பாட்டிற்கு இணங்க, இஸ்மாயிலின் அரசாங்கத்தை தொடர்ந்து ஆதரிப்பதாக அவர் கூறினார். 2020 இல் ஷெரட்டன் நகர்வை அடுத்து பிகேஆரில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஜுரைடா பெர்சத்துவில் சேர்ந்தார்.

கடந்த சில மாதங்களாக, நாட்டின் அரசியல் மற்றும் எனது எதிர்காலத் திசையைப் பற்றி நான் நீண்ட நேரம் யோசித்து வருகிறேன். நான் நெருங்கிய ஆதரவாளர்கள், அம்பாங் வாக்காளர்கள், அரசாங்கத்தில் உள்ள சக ஊழியர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்தவர்களிடமிருந்து கருத்துக்களை சேகரித்தேன் என்று அவர் கூறினார்.

ஆழமான பரிசீலனைக்குப் பிறகு, நான் PBMஇல் சேர முடிவு செய்துள்ளேன். இந்தக் கட்சியின் போராட்டங்களில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் மற்றும் அதன் அடிப்படைக் கொள்கைகளுடன் மிகவும் இணைந்துள்ளேன். என்னை  அமைச்சராக நியமிப்பதில் நம்பிக்கை வைத்ததற்காக டாக்டர் மகாதீர் முகமட், முஹிடின் மற்றும் இஸ்மாயில் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கவும் இந்தச் சந்தர்ப்பத்தில் விரும்புகிறேன்.

ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவும், மலேசியன் டிம்பர் கவுன்சிலின் மற்றொரு வணிக நோக்கத்திற்கான அழைப்பை நிறைவேற்றுவதற்காகவும் தான் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், ஜூன் 2 ஆம் தேதி மீண்டும் மலேசியா திரும்புவதாகவும் ஸுரைடா கூறினார்.

எனது பதவிக்காலத்தில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது பலவீனங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.எனது புதிய அரசியல் பயணத்திற்கு இந்த அன்பான நாட்டில் உள்ள அனைவராலும் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.

ஸுரைடா பெர்சத்துவை விட்டு PBMக்கு செல்வார் என்ற வதந்திகள் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து பரவி வந்தன. டிசம்பரில், தனக்கு எந்தக் கட்சியிலும் சேர வாய்ப்புகள் வரவில்லை. ஆனால் “எந்தவொரு சலுகையும் பரிசீலிக்கப்பட வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here