119 ரோஹினியர்களை நாட்டிற்குள் கடத்தும் முயற்சி முறியடிப்பு; நான்கு உள்ளூர் ஆண்கள் கைது

அலோர் ஸ்டார், மே 26 :

கடந்த செவ்வாய்கிழமை (மே 24) சுங்கை கெடாவில் மீன்பிடி படகில் மறைத்து வைக்கப்பட்டு, 119 ரோஹினியர்கள் நாட்டிற்குள் கடத்தும் முயற்சியை மலேசிய கடல்சார் அமலாக்க முகமைத்துவ துறையினர் முறியடித்ததுடன் உள்ளூர் ஆண்கள் நால்வரையும் கைது செய்துள்ளனர்.

கெடா காவல்துறைத் தலைவர் வான் ஹாசன் வான் அஹ்மட் கூறுகையில், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த MMEA குழு இரவு 9.20 மணியளவில் படகை இடைமறித்து ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, மீன் பெட்டியில் மறைந்திருந்த ரோஹினியர்களைக் கண்டுபிடித்தனர்.

அவர்களுள் 47 ஆண்கள், 32 பெண்கள், 23 சிறுமிகள் மற்றும் 17 சிறுவர்கள் என 5 முதல் 38 வயதுக்குட்பட்ட 119 ரோஹிகினியர்கள் படகின் கீழ் தளத்தில் உள்ள பெட்டியில் பதுங்கியிருந்ததாக அவர் வியாழக்கிழமை (மே 26) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஆட்கடத்தல் மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம் 2017 இன் பிரிவு 26A இன் கீழ் விசாரணைக்காக இரண்டு அரசு ஊழியர்களை உள்ளடக்கிய 32 மற்றும் 39 வயதுடைய நான்கு உள்ளூர் ஆண்களும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here