முன்னாள் காதலியின் வருங்கால கணவனை தாக்கியவர் கைது

கோத்த கினபாலுவில் தனது காதலியை வேறொரு ஆணிடம் இழந்த மனவேதனையில் தவித்த ஒரு தொழிலாளி காதலியின்  வருங்கால கணவரை தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளார். 20 வயதுடைய சந்தேக நபர், அண்மையில் தனது முன்னாள் காதலியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டவரை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

மே 18 அன்று மாலை 6.30 மணியளவில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து 24 வயதுடைய இளைஞன் முகத்திலும் உடலிலும் பலத்த காயங்களுக்கு உள்ளானார். அவர் இன்னும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாதிக்கப்பட்டவரின் 20 வயது வருங்கால மனைவி அதே நாளில் இரவு 11.28 மணிக்கு புகார் அளித்ததாக பெனாம்பாங் OCPD துணைத் தலைவர் முகமட் ஹாரிஸ் இப்ராஹிம் கூறினார். சந்தேக நபரை மே 20 ஆம் தேதி கண்டுபிடித்து தடுத்து வைக்க போலீசாரால் முடிந்தது என்றார். சந்தேக நபரின் இடுப்பில் கட்டப்பட்ட ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

சந்தேக நபரும் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது சோதனையில் உறுதி செய்யப்பட்டதாக  டிஎஸ்பி முகமட் ஹரீஸ் கூறினார். நாங்கள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326 இன் கீழ் (ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக) வழக்கை விசாரித்து வருகிறோம்  என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here