தம்பின், ஜூன் 1 :
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னை ஒரு இராணுவ அதிகாரி போல் மாறுவேடமிட்டு தந்திரமாக செயல்பட்டுவந்த நபரை, ரூமா ராக்யாட் சுங்கை லாயாங்கில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நேற்று மேற்கொண்ட அதிரடி சோதனையில் கைது செய்தனர்.
தம்பின் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அனுவால் அபி வஹாப் இதுபற்றிக் கூறுகையில், அந்த 27 வயது நபர் காவல்துறையினரால் தேடப்பட்டுவந்தநிலையில், நேற்று மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கூறினார்.
அவரது கூற்றுப்படி, காவலாளியாக பணிபுரிந்த நபரை கைது செய்ததில், இராணுவ அணிகலன்களுடன் கூடிய முழுமையான இராணுவ சீருடையும், கைவிலங்குகள் அடங்கிய போலீஸ் சின்னம் கொண்ட ஒரு பையும் கைப்பற்றப்பட்டது.
“முதற்கட்ட விசாரணையின் விளைவாக, சந்தேக நபர் இந்த இராணுவ அதிகாரியை ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் தொடர்புடையதாக ஒப்புக்கொண்டார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியராக ஆள்மாறாட்டம் செய்ததற்காக குற்றவியல் சட்டத்தின் 170வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது, ”என்று அவர் மேலும் கூறினார்.