விபச்சார விடுதியை நிர்வகிக்க உதவிய நபருக்கு RM18,000 அபராதம்

மலாக்கா, ஜூன் 8:

விபச்சார விடுதியை நிர்வகிக்க உதவியதற்காகவும், இரண்டு தாய்லாந்து பெண்களை அந்த வளாகத்தில் வாழ அனுமதித்ததற்காகவும் காப்பீட்டு முகவராக பணியாற்றும் ஒருவருக்கு RM18,000 அபராதம் மற்றும் ஒரு நாள் சிறைத்தண்டனையும் விதித்து ஆயிர் கேரோ அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

27 வயதான லாய் மிங் ரூய் என்பவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளிலும், குற்றஞ்சாட்டப்பட்டவர் தான் குற்றவாளி என ஒப்புக்கொண்டதையடுத்து, நீதிபதி நாரிமான் பதுருதின் இத்தண்டனை விதித்தார்.

முதல் குற்றச்சாட்டின்படி, அவர் ஜனவரி 9 ஆம் தேதி நண்பகல் 2.30 மணியளவில், இங்குள்ள தாபான் பாடாங் பலாங்கில் உள்ள எண் 30C, ஜாலான் பிபி 1 இல் ஒரு விபச்சார விடுதியை நிர்வகிக்க உதவியது கண்டறியப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 373 (1) (a) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை விதிக்கிறது.

இரண்டாவது குற்றச்சாட்டிற்காக, ஜிராவாடி ஃபோம்னோக் மற்றும் சனிசா ப்ரீ-ஆங் ஆகிய இரு தாய்லாந்து பெண்களை ஒரே தேதி, இடம் மற்றும் நேரத்தில் அவ்வளாகத்திற்குள் இருக்க அனுமதித்தது என குற்றஞ்சாட்டப்பட்டது.

குடிவரவுச் சட்டம் 1959/63 (திருத்தம் 2002) பிரிவு 55E (1) இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது மேலும் அதே சட்டத்தின் 55E (2) இன் கீழ் அதிகபட்சமாக RM30,000 அபராதம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது வளாகத்தில் உள்ள ஒவ்வொரு சட்டவிரோத குடியேறியவருக்கும் இவ்விரண்டும் விதிக்கப்படலாம்.

முன்னதாக, காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட RM1,150 ரொக்கம் பறிமுதல் செய்யப்படுவதைத் தவிர, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு பாடமாக அமைய, தகுந்த தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று துணை அரசு வழக்கறிஞர் என் சிவசங்கரி வாதிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர், ஜே.சி. ஊன், தனது கடைசிக்காரர் காப்பீட்டு முகவராக பணிபுரிந்தார் என்றும் ஆவர் இன்னும் பள்ளியில் படிக்கும் அவரது சகோதர் மற்றும் தாய்க்கும் ஆதரவளிகிறார் என்ற அடிப்படையில் ஒரு மென்மையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று முறையிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டுகளுக்கு முறையே RM8,000 மற்றும் RM10,000 அபராதம் விதித்ததுடன் அபராதம் செலுத்தத் தவறினால் இரண்டு மற்றும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்தது.

இந்த வழக்கின் உண்மைகளின்படி, விபச்சார நடவடிக்கைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட உளவுத்துறை நடவடிக்கையின் விளைவாக அதிகாரிகள் மற்றும் போலீசார் அடங்கிய குழு அந்த வளாகத்தில் சோதனை நடத்தியது.

சோதனை நடத்தப்படுவதற்கு முன்பு இரண்டு ஆண்கள் வளாகத்திற்குள் நுழைந்ததைக் கண்டறிந்த போலீசார், இரண்டு அறைகளில் படுக்கையில் இரண்டு தாய்லாந்து பெண்களைக் கண்டனர், அவர்கள் இந்த சோதனை நடவடிக்கைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிலிருந்து அங்கு வாழ்ந்ததாகக் கூறினர்.

வளாகத்தின் பாதுகாவலர் என்று கூறிக் கொண்ட குற்றவாளியை தடுத்து வைப்பதற்கு முன், இரண்டு அறைகளிலும் படுக்கையில் இருந்த RM1,150 பணம், ஆணுறைகள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here