பாலிக் பூலாவ், ஜூன் 16 :
இங்குள்ள தெலுக் பகாங்கில் 50 வயது மதிக்கத்தக்கவரது மண்டை ஓடு மற்றும் எலும்புகள் தென்மேற்கு மாவட்ட காவல்துறை தலைமையகத்தினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி, காட்டில் குறித்த மண்டை ஓடு மற்றும் எலும்புகள் தாமான் ரிம்பாவில் உள்ள வனப்பகுதியில் மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக போலீசாருக்கு புகார் வந்தது.
“சம்பவ இடத்தில் மேற்கொண்ட விசாரணையில் இதுவரை ஆள் அடையாளம் காணப்படவில்லை என்றும், தடயவியல் நிபுணர்களால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், அது 50 வயதுடைய ஒருவருக்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இவ்வழக்கு தொடர்பில் திடீர் மரண விசாரணைப் பத்திரம் திறக்கப்பட்டுள்ளதாகவும், யாராவது குடும்ப அங்கத்தினரைக் காணவில்லை எனில், மேலதிக நடவடிக்கைகளுக்கு சார்ஜென்ட் மேஜர் ஒத்மான் ஹமீட்டை 016-453 6373 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.