13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 22 வயது வாலிபர் மீது குற்றச்சாட்டு

கோல திரெங்கானு, ஜூன் 22 :

சமூக ஊடகங்கள் மூலம் தனக்கு அறிமுகமான சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் ஒரு வாலிபர் மீது இன்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட அஹ்மட் அமிருல் அரிஃப் ரஸாலி, 22, என்ற வாலிபருக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிபதி தாசுகி அலி முன்நிலையில் வாசிக்கப்பட்ட பின்னர், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார்.

குற்றச்சாட்டின்படி, ஜூன் 11 அன்று இரவு 7 மணியளவில் கோல திரெங்கானு மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில், பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376 (1) இன் கீழ் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குற்றம் பிரம்படிகள் வழங்க வழிசெய்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவுடன், ஜூன் 29 ஆம் தேதியை வழக்கின் உண்மைகள் மற்றும் தண்டனைக்கான மறு தேதியாக நீதிமன்றம் நிர்ணயித்தது.

மேலும், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என்பதுடன் குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here