இந்தோனேசியாவிற்கு போதைப்பொருள் கடத்த முயன்ற இரு மலேசியர்கள் கைது

கோலாலம்பூர், ஜூன் 25 :

வடக்கு சுமாத்ராவிற்கு அப்பாலுள்ள கடலில், படகு மூலமாக மலேசியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தும் இருவரின் முயற்சியை இந்தோனேசிய கடற்படை முறியடித்துள்ளதாக அன்டாரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 21 ஆம் தேதி, 29 கிலோ சியாபு மற்றும் 60,000 எக்ஸ்டசி மாத்திரைகள் மீட்கப்பட்டதை அடுத்து, இக்குழு அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நம்பப்படுவதாகவும், கடத்தலில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

இந்தோனேசிய கடற்படையின் முதல் கடற்படை கட்டளை தளபதி, ரியர் அட்மிரல் அர்ஸ்யாட் அப்துல்லா கூறுகையில், இரண்டு பேரும் மலேசியாவிலிருந்து பயணித்தபோது, தஞ்சோங் பாலாய் தளத்திலிருந்து ரோந்துக் குழுவால் ஆசாஹான் கடற்பகுதியில் கடலில் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here