கிளாந்தானில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில், ஆறு நாட்களில் 240 பேர் கைது

கோத்தா பாரு, ஜூன் 26 :

கிளாந்தானில் நேற்றுடன் முடிவடைந்த Op Tapis என்ற குறியீட்டு பெயருடன் மேற்கொள்ளப்பட்ட ஆறுநாள் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில், போதைப்பொருள் கடத்தல் செய்ததாக சந்தேகிக்கப்படும் 240 நபர்களை கிளாந்தான் போலீசார் கைது செய்ததுடன், RM98,553.90 மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், ​போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் தொடர்புடையதாக கருதப்படும் RM57,000 என மதிப்பிடப்பட்ட பல்வேறு பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிளாந்தான் காவல்துறையின் இடைக்கால தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் கூறுகையில், தும்பாட், பாலேக்பாங், கம்போங் பெண்டாங் பூலாவ், பலேக்பாங்கில் வைத்து மர பெஞ்ச்சில் அமர்ந்திருந்த போதைப்பொருள் வியாபாரி என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர் அளித்த தகவலின்படி, இரவு 10.30 மணியளவில் பச்சை இரும்புப் பெட்டியுடன் தனியாக இருந்த 27 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.

“அந்தப் பெட்டியில் சோதனை செய்ததில் 194 யாபா மாத்திரைகள் கிடைத்தன. பின்னர் முதலாவது சந்தேக நபர் கைது செய்யப்படட மர பெஞ்ச் பகுதியில் போலீசார் மேற்கொண்டு சோதனை நடத்தியதில், தரையில் ஊதா நிற பிளாஸ்டிக் பொட்டலத்தில் 2,800 யாபா மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், 3.7 கிராம் சியாபு மற்றும் 500 மில்லிலிட்டர் கெத்தும் நீர் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு RM30,200 மற்றும் சந்தேக நபரின் ஹோண்டா ஜாஸ் காரையும் பறிமுதல் செய்துள்ளோம், “என்று அவர் இன்று கிளாந்தான் காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

முகமட் ஜாக்கி மேலும் கூறுகையில், கம்போங் லாலாங் பெபுயுவில் நடந்த இரண்டாவது சோதனையில், பொது நடவடிக்கைப் படையின் பெங்கலான் செபாவின் தானா மேரா பட்டாலியன் 8 படைப்பிரிவு, ஒரு நபர் ஓட்டிச் சென்ற லோரியைத் தடுத்து நிறுத்தி 700 கிலோகிராம் கெத்தும் இலைகளைக் கைப்பற்றியது.

கெடாவின் பாலிங்கைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் காலை 10.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

“கேன்வாஸால் மூடப்பட்ட லோரியின் பின்புறம் சோதனை செய்ததில், கெத்தும் இலைகள் அடங்கிய 70 பிளாஸ்டிக் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர் கெத்தும் இலைகளை அண்டை நாட்டிற்கு கடத்த இருந்ததாக நம்பப்படுகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here