பாசீர் பாஞ்சாங்கில் கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு

போர்ட்டிக்சன், ஜூலை 1 :

இங்குள்ள பாசீர் பாஞ்சாங்கின் ஒரு கிராமத்தில் உள்ள கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில், நேற்று ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.

இறந்தவரான 66 வயது முதியவரின் சடலம் கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில், காலை 11 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைமைக் கண்காணிப்பாளர் ஐடி ஷாம் முகமட் தெரிவித்தார்.

“போர்ட்டிக்சன் மாவட்டத் தலைமையக (IPD) காவல்துறையும், நெகிரி செம்பிலான் மாவட்ட தலைமையகத்தின் ஃபோரன்சிக்குழுவும் (IPK) சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, முதியவர் கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில் இதுவரை எந்த குற்றச் செயல்களும் கண்டறியப்படவில்லை, இறந்தவர் தற்கொலைக்கு முயன்றதாக நம்பப்படுகிறது, ஆனால் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இறந்தவர் வேலை செய்யவில்லை என்றும், 2019 ஆம் ஆண்டு முதல் போர்ட்டிக்சன் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருப்பதாகவும், கடைசியாக ஜூன் 7 ஆம் தேதி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

“இறப்புக்கான காரணத்தை அறிய இன்று பிரேத பரிசோதனை நடத்தப்படும், மேலும் இந்த வழக்கு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here