பேராக் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட நடவடிக்கையில் 101 சட்டவிரோத தொழிலாளர்கள் கைது

ஈப்போ, ஜூலை 2 :

இங்குள்ள கம்போங் கெபாயாங்கில் உள்ள குப்பை மற்றும் மறுசுழற்சி தொழிற்சாலையில், நேற்று நடந்த சோதனையில் மலேசிய குடிநுழைவுத் துறையின் பேராக் மாநில உறுப்பினர்களால் 101 சட்டவிரோத தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை Op Mahir மற்றும் Op Sapu என்ற குறியீட்டு பெயர்கள் மூலம் நடத்தப்பட்ட சோதனைகள், சிம்பாங் பூலாயில் உள்ள கடை வீடுகள் மற்றும் பகிரப்பட்ட வீடுகளிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பேராக் குடிநுழைவுத் துறை இயக்குநர் ஹப்ட்ஜான் ஹுசைனி கூறுகையில், 162 வெளிநாட்டவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையின் விளைவாக, பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 101 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சீனா, மியான்மர், இந்தோனேசியா, வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 15 முதல் 62 வயதுக்குட்பட்ட குடிமக்கள் என்று அவர் கூறினார்.

“செல்லுபடியான பாஸ் இல்லாமல் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதாக சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, குப்பை, உலோகம் மற்றும் மறுசுழற்சி தொழிற்சாலைகளில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

“ரெய்டு இடத்தில் உறுப்பினர்கள் இருந்தபோது, தாம் கைதாவதிலிருந்து தப்பிக்கும் நோக்கில் உயரமான சுவர்களில் ஏறியும், வளாகத்திற்குப் பின்னால் உள்ள காடுகளை நோக்கியும் சிலர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஓடினார்கள்.

“தொழிற்சாலைப் பகுதியில் கூர்மையான பொருள்கள் மற்றும் இரும்பு உலோகங்களால் நிரம்பியிருப்பதால் குடிநுழைவு துறை உறுப்பினர்களும் கவலையான தருணங்களை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், உறுப்பினர்களின் திறமையால் வளாகத்தைச் சுற்றி வளைத்து அவர்களைக் கைது செய்ய முடிந்தது, ”என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

அவரது கூற்றுப்படி, தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சட்டவிரோத குடியேற்றவாசிகளும் மேலதிக விசாரணைக்காக பேராக் குடிநுழைவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

“குடிநுழைவுத் திணைக்களம் எப்போதும் சட்ட விரோதமாக குடியேறுபவர்களின் இருப்பை தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கை மற்றும் செயல்பாடுகளை அதிகரிக்கும். இது தொடர்பில் பொதுமக்கள் தகவல் மற்றும் புகார்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இதனால் சரியான வழிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், ”என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here