GM Klang ஏற்பாட்டில் எஃப்.ஏ.எம். டிரிப் சிலாங்கூர், சபா, சரவாக் மாநிலங்களுக்கு ஊடகவியலாளர்களின் சுற்றுப்பயணம்

சிலாங்கூர், சபா, சரவாக் ஆகிய மாநிலங்களுக்கிடையிலான சுற்றுலாத் துறைகளை மேம்படுத்துவதற்கு GM Klang எஃப்.ஏ.எம். சுற்றுலாவை (FAM Trip) ஏற்பாடு செய்தது.
மலேசியா கடந்த மாதம் எண்டமிக் காலத்தில் நுழைந்த பின்னர் புதிய நிம்மதியைத் தந்திருக்கிறது. கிட்டத்தட்ட முழுமையாக முடங்கிப் போயிருந்த மலேசிய சுற்றுலாத்துறைக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டிருக்கிறது. கோவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக அனைத்துவிதமான நடமாட்டமும் பயணங்களும் எல்லைகள் மூடப்பட்டதால் நிலைகுத்திப் போயின.


சிலாங்கூரில் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணங்களை ஊக்குவிக்கும் முயற்சியாக GM Klang மொத்த வியாபார மையம் புதிய அணுகுமுறையை முன்னெடுத்து, உள்நாட்டு பத்திரிகையாளர்களையும் ஊடகவியலாளர்களையும் அழைத்துக்கொண்டு சிலாங்கூர், சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ள மனங்கவர் இடங்களைச் சுற்றிக்காட்டி அறிமுகம் செய்தது.


மீடியா போர்னியோ 2022 உடன் எஃப்.ஏ.எம். டிரிப்- சிலாங்கூரை முதலில் சுற்றி வருவோம் (FAM Trip bersama Media Borneo 2022 – Pusing Selangor Dulu) என்ற அத்திட்டத்திற்கு டூரிசம் சிலாங்கூர், டூரிசம் மலேசியா சபா, டூரிசம் மலேசியா சரவாக், கிள்ளான் நகராண்மைக் கழகம் ஆகிய தரப்புகளிடமிருந்து அமோக ஆதரவு கிட்டியது.
இப்புதிய அணுகுமுறை போர்னியோ முதல் சிலாங்கூர் வரை குறிப்பாக கிள்ளான் பட்டணத்தில் புதைந்துகிடக்கும் அழகுக் களஞ்சியங்களை, தனித்துவத்தை ஊடகவியலாளர்களுக்குக் காட்டப்பட்டதில் புதிய தாக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று GM Klang மொத்த வியாபார மையத்தின் பிராண்ட் தொடர்புத்துறை நிர்வாகி புவான் நோர்சுஹாய்டா ஒஸ்மான் கூறினார்.


கிள்ளான் பட்டணத்தில் GM Klang எனும் மலேசியாவின் மிகப்பெரிய மொத்த வியாபார மையத்தையும் கொண்டிருக்கிறது. சபா, சரவாக் சுற்றுப்பயணிகளைக் கவரும் இடமாகவும் அது புகழ்பெற்றிருக்கிறது.
இங்கு ஷாப்பிங் செய்வதில் ஒரு புதுமையையும் உன்னதத்தையும் அவர்கள் உணர்கின்றனர். ஒரே கூரையின் கீழ் அனைத்துப் பொருட்களும் கிடைப்பதை ஒரு புதிய அனுபவமாக அவர்கள் பார்க்கின்றனர்.
பொருட்களை மொத்தமாகக் கொள்முதல் செய்து சிறு வணிகங்களில் ஈடுபடவும் அவர்களை ஊக்குவிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
4 பகல் – 3 இரவுகள் என்று நீடித்த பயணம் சிலாங்கூரில் மனங்கவரும் மஸ்ஜிட் நெகிரி ஷா ஆலம் – மஸ்ஜிட் சுல்தான் சலாவுடின் அப்துல் அஸிஸ், தாமான் தாசேக் ஷா ஆலம், பூலாவ் கெத்தாம், GM Klang மொத்த வியாபார மையம், பாண்டார் கிள்ளான் வரலாற்று நகரம் ஊடகவியலாளர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த அனுபவத்தைத் தந்தது. கிள்ளான் நகராண்மைக்கழகம் மிகச் சிறப்பான ஏற்பாட்டைச் செய்திருந்தது.GM Klang வியூகப் பங்காளியான GM BB செல்லவும் மறக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here