உட்லண்ட்ஸில் ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும்

ஜோகூர் பாருவில் உள்ள உட்லண்ட்ஸ் என்ற இடத்தில் இன்று அதிகாலை லோரி ஒன்று பல வாகனங்கள் மீது மோதியது தொடர்பான காணொளி குறித்து சாலைப் போக்குவரத்துத் துறையின் (ஜேபிஜே) உடனடி விசாரணை நடத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் உறுதியளித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோ மீதான விசாரணை, 2010 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தொழில் விதிகளின்படி இருக்கும் என்று அவர் கூறினார்.

விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் லாரி டிரைவர் அல்லது சம்பந்தப்பட்ட முதலாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

லோரி   ஓட்டுநரின் ஜிடிஎல் உரிமத்தை இடைநிறுத்துவது, நிறுவனத்தின் அனுமதி அல்லது சாலை போக்குவரத்து சட்டம் 1987 (சட்டம் 333) இல் வழங்கப்பட்ட பிற தண்டனைகள் ஆகியவை இதில் அடங்கும் என்று அவர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் ஒரு இடுகையில் கூறினார்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், விசாரணையை எளிதாக்குவதற்கு ஆதாரங்கள், வீடியோ பதிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அந்த சம்பவத்தின் காணொளி https://fb.watch/e6h9mlSFIm/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here