பினாங்கில் வீசிய கடும் புயலால் நான்கு வீடுகளின் கூரைகள் பறந்தன; இரு வீடுகளின் சுவர்கள் சேதம்

பட்டர்வொர்த், ஜூலை 12 :

நேற்று மாலை 5 மணியளவில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக கம்போங் ஜாவா, பிறை பகுதியில் குறைந்தது நான்கு வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன.

இச்சம்பவத்தில் மேலும் இரண்டு கிராம வீடுகளின் வெளிப்புறச் சுவர்களும் சேதமடைந்தன.

அங்கு வசிக்கும் ஒருவரான, அஸ்ருல் அஃபெண்டி கூறுகையில், நான்கு வீடுகளில் மூன்று வீடுகள் ஆளில்லாமல் இருந்தன, அதே நேரத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்த ஒரு குடும்பம் காயமின்றி உயிர் தப்பியது.

புயல் வீடுகளின் கூரைகளை வீசுவதைக் காட்டும் 20 நிமிட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் பினாங்கின் சில பகுதிகளில் புயல் தாக்கியது தெளிவாக புரிகிறது.

இதற்கிடையில், கம்போங் ஜாவாவில் அகீகா (குழந்தை பிறந்த பின்னர் விலங்குகளை பலியிடும் இஸ்லாமிய பாரம்பரியம்) மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வினை நடத்திக்கொண்டிருந்த ஒரு குடும்பம் மற்றும் அவர்களின் 30 விருந்தினர்களும் இந்தப் புயல் காரணமாக கவலையான தருணங்களை எதிர்கொண்டனர்.

விருந்தினர்கள் கூடாரத்திற்குள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர், இருப்பினும், உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை. விருந்தினர்களின் கூடாரம் குடும்பத்தினரின் வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் மாட்டிக் கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here