4 நாடுகளுக்கான தூதர்களின் நியமனக் கடிதங்களை மாமன்னர் வழங்கினார்

மாமன்னர் இன்று இஸ்தானா நெகாராவில் நான்கு புதிய மலேசியத் தூதரகத் தலைவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார். புதிதாக நியமிக்கப்பட்ட தூதுக்குழுத் தலைவர்கள் தென் கொரியா (லிம் ஜே ஜின்), ஜப்பான் (ஷாஹ்ரில் எஃபெண்டி அப்துல் கனி), சவுதி அரேபியா (வான் ஜைதி வான் அப்துல்லா) மற்றும் ஈரான் (கைரி ஓமர்) என்று பெர்னாமா தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் தாஜுதீன் அப்துல் ரஹ்மான் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. புத்ராஜெயா தனது வேட்புமனுவை வாபஸ் பெற முடிவு செய்ததை அடுத்து, பாசீர் சலாக் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தோனேசியாவுக்கான மலேசியத் தூதராக இருக்கமாட்டார் என்று  எப்ஃஎம்டி நேற்று தெரிவித்தது.

நேற்றைய தினம் இந்த விஷயத்தை நன்கு அறிந்த அரசாங்க வட்டாரத்தை தொடர்பு கொண்ட போது, தாஜுதீனின் நியமனம் தொடர்பாக புத்ராஜெயா தனது முடிவை மாற்றி கொண்டு விட்டதாக கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here