கட்டடத்திலிருந்து தவறி விழுந்து இறந்த ஆடவரின் வழக்கில் திருப்பம்; இருவர் கைது

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 13 :

இங்குள்ள கெலனா ஜெயாவிலுள்ள ஒரு கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து விழுந்து, இறந்தவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அதனுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் உள்ளூர் ஆட்கள் இருவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமீட் கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தனது துறைக்கு பிற்பகல் 2.50 மணியளவில் தகவல் கிடைத்தது.

“அங்கு சென்ற போலீஸ் குழுவினர் வெளிநாட்டவர் என்று நம்பப்படும் ஒருவரின் உடலை நிர்வாண நிலையில் கண்டனர்.

“இதுவரை, பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை நாங்கள் அடையாளம் காணவில்லை, அத்தோடு அவர் 30 வயதுடையவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்றிரவு 10.15 மணியளவில் சம்பவ இடத்தில் உள்ள ஒரு வீட்டில், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் 40 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்களை கைது செய்தனர்.

“சந்தேக நபர்களிடம் இருந்த மொபைல் போன் மற்றும் சில பாலியல் உபகரணங்கள் உட்பட பல்வேறு தனிப்பட்ட பொருட்களையும் நாங்கள் பறிமுதல் செய்தோம் என்றார்.

கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர்கள் இருவரும் ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here